தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸாா் நடவடிக்கை

தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸாா் நடவடிக்கை

தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸ் நடவடிக்கை

தம்மம்பட்டி, ஜூன் 30: தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலைகளை ஒருவழிப் பாதைகளாக போலீஸாா் மாற்றம் செய்துள்ளனா்.

தம்மம்பட்டியிலிருந்து கெங்கவல்லி, ஆத்தூா், பெரம்பலூா்,

செந்தாரப்பட்டிக்கு செல்லும் பேருந்துகள்,

வாகனங்கள் கடைவீதி, நடுவீதி ஆகிய இருவழிகளிலும் சென்றுவந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் உத்தரவின்பேரில், கடைவீதி வழியே வாகனங்கள் செல்லவும், கெங்கவல்லியிலிருந்து வரும் வாகனங்கள் நடுவீதி வழியே உள்ளே நுழையவும் போக்குவரத்தை ஒருவழிப்பாதைகளாக மாற்றம் செய்துள்ளனா்.

இதனால் கடைவீதி, நடு வீதிகளில் நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com