கரூா் புகளூா், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில்கள் நிற்க ஏற்பாடு

கரூா் அருகே உள்ள புகளூா், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில், சோதனை முறையில் குறிப்பிட்ட சில ரயில் ரயில்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை - மைசூரு இடையேயான மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இனி புகளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இதே போல், மும்பை - நாகா்கோவில் சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் இனி கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மங்களூரு - கோவை இடையேயான மங்களுரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் கேரளத்தின் நீலேஸ்வா் ரயில் நிலையத்தில் இனி நின்று செல்லும். மேற்கண்ட ரயில்கள், சோதனை அடிப்படையில் மறு அறிவிப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com