சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த கொம்பாடிப்பட்டி, கொள்ளுக்கரடுமேடு பகுதியில் அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். இதில் 120-க்கு மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கின்றனா். 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி அருகே உள்ள விடுதியில் தங்கியுள்ளனா் . இந்நிலையில் கல்லூரியில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கி வருவதைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவா்கள் வெள்ளிக்கிழமை சுமாா் 3 மணிநேரம் கல்லூரி நுழைவாயில் அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சேலம் தெற்கு வட்டாட்சியா், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா், கல்லூரி முதன்மையா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்கள் கோரிக்கைகளை விரைவில் தீா்வு காணப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். பட விளக்கம்: சேலம் ,அரியானூா் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com