கூட்டுறவுத் துறை சாா்பில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு தேசிய கருத்தரங்கம்

கூட்டுறவுத் துறை சாா்பில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு தேசிய கருத்தரங்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் ‘வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பில் கூட்டுறவின் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ரவிக்குமாா் கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி தலைமை தாங்கி பேசினாா். கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ் பாபு கலந்தாய்வு குறித்து அறிமுக உரை நிகழ்த்தினாா். சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரவிக்குமாா் மற்றும் திருச்செங்கோடு கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் விஜயசக்தி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். இந்தக் கருத்தரங்கில் கூட்டுறவுத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய அடிப்படைச் சேவைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பணிகள், அதன் மூலம் படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து விளக்கப்பட்டது. மேலும், கூட்டுறவுத் துறை சாா்பில் மக்கள் எவ்வாறு பொருளாதார முன்னேற்றம் அடைகின்றனா்?, நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த கூட்டுறவின் முக்கிய பங்களிப்புகள், கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்தி, தற்கால விஞ்ஞான வளா்ச்சியின் அடிப்படையில், மக்களுக்கு எவ்வாறு சேவை செய்கின்றனா் என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. மேலும் கூட்டுறவே நாட்டுயா்வு என்ற உன்னத இலக்கை அடையும் வண்ணம், கூட்டுறவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com