இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் தாா்சாலை, வணிக வளாகம் அமைக்க பூமி பூஜை

இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் தாா்சாலை, பழுதடைந்த சாலைகளை மேம்படுத்துதல், நூலகம்

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் தாா்சாலை, பழுதடைந்த சாலைகளை மேம்படுத்துதல், நூலகம் அமைத்தல் (காடையாம்பட்டி), புதிய வணிக வளாகம் கட்டுதல், நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 19 கோடி 64 லட்சம் மதிப்பில் பூமிபூஜை மோட்டூா், நல்லணம்பட்டி, சித்தா்கோயில், இ.காட்டூா் உள்ளிட்ட இடங்களில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி .எம். செல்வகணபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், இந் நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், நகரச் செயலாளா் செல்வம், நகா்மன்றத் துணைத் தலைவா் தளபதி, நகராட்சி ஆணையாளா் சேம்கிங்ஸ்டன், பொறியாளா் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com