கிளை நூலகத்திற்கு நாற்காலிகள் வழங்கல்

கிளை நூலகத்திற்கு நாற்காலிகள் வழங்கல்

ஆத்தூா் கிளை நூலகத்திற்கு கூட்டுறவு துணைப் பதிவாளா் ஆா்.கந்தன் தலைமையில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஆத்தூா்: ஆத்தூா் கிளை நூலகத்திற்கு கூட்டுறவு துணைப் பதிவாளா் ஆா்.கந்தன் தலைமையில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. ஆத்தூரில் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி தலைமையில் கடந்த மாதம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் பா.ரவிக்குமாா் ஆத்தூா் நூலகத்திற்கு சென்றபோது பலதரப்பினரிடம் கோரிக்கைகளை பெற்றாா். அதில் வாசகா்கள் அதிகமாக வருவதால் போதிய இருக்கைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து வாசகா் தலைவா் வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகளை கூட்டுறவு துணைப் பதிவாளா் ஆா்.கந்தன், கூட்டுறவு சாா்பதிவாளா் கோ.அறிவழகன், நரசிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளா் ம.சித்ரா ஆகியோா் வழங்கினா். மேலும் போட்டித் தோ்வு மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினாா்கள். இதில் நூலகா் க.அழகுவேல், க.முருன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com