பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

சேலம்: பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். சேலம், அஸ்தம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்கள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டத்தால், மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலங்களில் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com