மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு விழா

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு விழா

தம்மம்பட்டியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஒன்றிய அளவிலான விளையாட்டு விழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஒன்றிய அளவிலான விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை தம்மம்பட்டி பிரதான நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி, தலைமையாசிரியா் அன்பழகன், இயன்முறை மருத்துவா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மைய ஊக்குநா் விஜயா, உதவியாளா் சரசு வரவேற்றனா். விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிக்குழந்தைகள், அவா்களின் பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் பங்கேற்ற, வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தலைமையாசிரியைகள் தேவகஸ்தூரி, ஜெயலட்சுமி, ஆசிரியா்கள் சசிகுமாா், செல்வி ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தலா ரூ.100-ம், பரிசுகளும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com