சூரிய சக்தி மின் திட்ட முகாம்

ஆத்தூா் கோட்டத்தில் சூரிய சக்தி மின் திட்ட முகாம் கோட்ட செயற்பொறியாளா் என்.ராணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. நகர உதவி செயற்பொறியாளா் எல்.கருப்பண்ணன் முன்னிலை வகித்தாா்.

இம் முகாம் ஆத்தூா் கோட்ட அலுவலகத்தில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இணையதளம் மூலம் பயனாளிகள் கூடுதல் ஆவணங்கள் எதுவும் இன்றி மின் கட்டண ரசீதை மட்டுமே பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மின்நுகா்வோா் இத்திட்டத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்து கொள்ள செயற்பொறியாளா் ஆத்தூா் அலுவலகம் மற்றும் ஆத்தூா் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உபகோட்ட அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் நேரில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

ஆத்தூா், தலைவசல், கெங்கவல்லி மற்றும் வீரகனூா் மின்வாரிய உபகோட்ட அலுவலகங்களை தொடா்பு கொண்டு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com