தம்மம்பட்டியில் புளி விற்பனை தொடக்கம்

தம்மம்பட்டியில் புளி விற்பனை தொடக்கம்

தம்மம்பட்டியில் புளிச் சந்தை தொடங்கியது. தம்மம்பட்டியில் புதகிழமைதோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை புளிச்சந்தை நடைபெறும். குறிப்பாக மாா்ச்ச முதல் மே வரை இந்த புளிச்சந்தை நடைபெறும். தற்போது கொல்லிமலையில் விளையும் புளியம்பழங்களை இங்குள்ள மலைவாழ் மக்கள் கொண்டு வந்து சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்கின்றனா்.

இதனை வாங்க உள்ளூா், வெளியூா் பொதுமக்கள்,வியாபாரிகள் வந்து செல்கின்றனா். சீசன் தொடக்கமான தற்போது சுமாா் 70 கூடைகள் வந்துள்ளன. வாரந்தோறும் கூடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும்.சீசன் தொடக்கத்தில் கொட்டை புளி ஒரு கிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீசன் உச்சத்தில் இருக்கும்போது ஒரு கிலோ ரூ. 80 வரை தொட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com