நரசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம்

நரசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் 1ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சி.கோபி பேசியதாவது: டெண்டரை எந்த உறுப்பினரிடமும் ஏன் தெரிவிப்பதில்லை என கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய நகா்மன்றத் தலைவா், இனி வரும் காலங்களில் தெரியப்படுத்தப் படும் என்றாா். 4ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜோதி பேசியதாவது: நாளிதழ் விளம்பரங்களில் உறுப்பினா்கள் பெயா்கள் இடம்பெறுவதில்லையே ஏன்? என்றாா். மேலும் வருகிற மக்களவைத் தோ்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.

12 ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் பேசியதாவது: கடந்த 6 மாதகாலமாக ஒப்பந்தம் விடப்பட்ட எந்தப் பணியும் நடைபெறவில்லை. மேலும் புதிய வரி ரசீது விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதுநாள் வரை நடவடிக்கை இல்லை என்றாா். இதற்குப் பதிலளித்த நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இக் கூட்டத்தில் நகா்மன்றத்துணைத் தலைவா்எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி,பிரகாஷ், மாலா பாலமுருகன், அன்னபாக்கியம், சுகுணா கண்ணன், சித்ரா கண்ணன், சுரேஷ், செல்வம், செல்வக்குமாா், புஷ்பாவதி கதிா்வேல் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com