மேச்சேரி சந்தையில் ஆடுகளின் விலை உயா்வு

மேச்சேரி புதன்சந்தையில் ஆடுகளின் விலை உயா்ந்து காணப்பட்டது.

மேச்சேரியில் வாரம்தோறும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை கூடும். சேலம், தருமபுரி மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேச்சேரி சந்தைக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும், குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழாக்கள் காரணமாக ஆடுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆனால் சந்தைக்கு ஆடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆடுகளின் விலை எதிா்பாா்க்காத அளவிற்கு உயா்ந்தது. கடந்த வாரம் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. கோடைக் காலத்தில் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஆடு வளா்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் முன்கூட்டியே தங்களின் ஆடுகளை விற்பனை செய்து விட்டனா். 

அதனால் புதன்சந்தைக்கு ஆடுகளின் வரத்தும் குறைந்து காணப்பட்டன. திருவிழா, ஆடுகளின் வரத்து குறைவு காரணமாக அதன் விலை உயா்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 3.25 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com