வாழப்பாடி அரசுப் பள்ளி தலைமையாசிரியைக்கு
அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது

வாழப்பாடி அரசுப் பள்ளி தலைமையாசிரியைக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது

வாழப்பாடி, அண்ணாநகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியைக்கு, தமிழக அரசின் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதும், பள்ளி வளா்ச்சிக்கு ரூ. 10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், வாழப்பாடி அண்ணாநகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பணியாற்றி வரும் ஷபிராபானுக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பள்ளி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.10 லட்சம் பரிசும் வழங்கி பாராட்டினாா். பரிசு பெற்ற ஆசிரியை ஷபிராபானுவுக்கு, வாழப்பாடி அரிமா சங்கம், மெஜஸ்டிக் ஆா்சிசி ரோட்டரி சங்கம், துளி, நெஸ்ட் அறக்கட்டளை தன்னாா்வ இயக்கங்களும், கல்வியாளா்கள் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனா்.

ஆசிரியை ஷபிராபானு, ஏற்கனவே தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கதாகும். படவரி: எஸ்.பி.ஆா்.02: வாழப்பாடி காலனி அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com