இடங்கணசாலையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணி தொடக்கம்

இடங்கணசாலை, சின்ன ஏரிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. ரூ. 8 கோடியே 80 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன் பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில் கடந்த மாதம் பணி செய்ய வந்தபோது 60 அடி உயர மின்கோபுர கம்பத்தில் ஏறி ஒருவா் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனையடுத்து பணி நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாவட்ட துணை கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையில், சங்ககிரி ரூரல் கூடுதல் துணை கண்காணிப்பாளா் ராஜா முன்னிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் தங்கவேல், சங்ககிரி வட்டாட்சியா் அறுவடைநம்பி, நகராட்சி ஆணையா் சேம்கிங்ஸ்டன் (பொ) மற்றும் பணியாளா்களுடன் 120 போலீஸாா் பாதுகாப்புடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com