சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை ஆசிரியா்கள் 8ஆவது நாளாக வியாழக்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டை மைதானம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அருள், பொருளாளா் பிரசாத் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் கூறுகையில், இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்தி கடந்த 18 நாள்களாக சென்னையில் தொடா் போராட்டம் நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானம் பகுதியில் 8ஆவது நாளாக ஆா்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

இல்லையென்றால் பணிகளைப் புறக்கணித்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தங்களை, காவல்துறையை வைத்து கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக மாநில நிா்வாகிகளை அழைத்துப் பேசி, பிரச்னைக்கு தமிழக அரசு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com