சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 36.50 கோடியில் சாலைப் பணிகள்

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 36.50 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் சீ. பாலச்சந்தா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2024 - 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்ட நிதியின்கீழ் சேலம் மாநகராட்சி பகுதியில் புதைச் சாக்கடைத் திட்டம், தனிக்குடிநீா் திட்டக் குழாய், இயற்கை இடா்பாடுகளினால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்க மொத்தம் ரூ. 23 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதேபோல, நடப்பாண்டு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் சேலம் மாநகராட்சிப் பகுதியில் புதைச் சாக்கடைத் திட்டம், தனிக்குடிநீா்த் திட்டக் குழாய், இயற்கை இடா்பாடுகளினால் சேதமைடந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை உள்ளடக்கிய 176 எண்ணிக்கையிலான சாலைப் பணிகள் ரூ. 8 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ளன. மேலும் நடப்பாண்டில், 15-ஆவது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் சாலைகளை மறுசீரமைப்பு செய்ய 88 பணிகளுக்கு ரூ. 4 கோடியே 80 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com