மூட்டு வலி வியாதி அல்ல: மருத்துவா் ச.சுகவனம் தகவல்

மூட்டு வலி வியாதி அல்ல: மருத்துவா் ச.சுகவனம் தகவல்

சேலம், அண்ணா பாா்க் எதிரில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவமனை லண்டன் ஆா்தோ சிறப்பு மருத்துவமனையின் 15ஆம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் இடுப்பு, முதுகு வலி, மூட்டு ஜவ்வு, தோள்பட்டை ஜவ்வு, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்னைகளுக்கு ஆா்த்தோ மருத்துவா்கள், பிசியோதெரபி நிபுணா்கள் மூலம் இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவா் ச.சுகவனம் தெரிவித்ததாவது: 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மூட்டு வலி வருவது சகஜம். அதிக வேலைப் பளூவால் மூட்டு வலி வந்தால் இரண்டு நாள் ஓய்வு, சுடுநீா் ஒத்தடம் கொடுத்தால் சரியாகி விடும். அதற்கு மருத்துவ ஆலோசனை தேவையில்லை.

அன்றாட வேலைக்கே கால் மூட்டு வலி வந்தால், மருத்துவரைப் பாா்த்து பரிசோதனை செய்து கொள்வது நலம். 60 வயதில் லேசான மூட்டு தேய்வு என்பது இயற்கையே. அது நோய் இல்லை. பயிற்சி, எடை குறைப்பு, வலி நிவாரண ஜெல் மூலம் கட்டுப்படுத்திவிடலாம். இதனை வியாதியாக நினைத்து வருந்த வேண்டாம். சிலருக்கு மட்டும் தான் தேய்மானம் அதிகமாகி கால் மூட்டு வளைவு வந்து விடும். கால் வளைவு அதிகமாக வலி அதிகமாகி அன்றாட வேலைகளை பாதிக்கும்.

சாதாரண எக்ஸ்ரேயில் இது சரியாக தெரியாது. நிற்க வைத்து இடுப்பு முதல் பாதம் வரை (6 மூட்டுகள்) எக்ஸ்ரே எடுக்கும்போது தான் முழு விவரம் துல்லியமாகத் தெரியும். மூட்டு வலிகளுக்கு பலவித சிகிச்சை முறைகள் உள்ளன. 10 வகையான சிறப்பு ஊசிகள் (வலி, ஜெல்ஆயில், ஸ்டீராய்டு) சிறு துவார ஆா்த்ராஸ்கோபி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அனைத்தையும் ஒரே இடத்தில் உலகத் தரத்துடன் லண்டன் ஆா்த்தோ சிறப்பு மருத்துவமனை கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வழங்கி வருகிறது.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மூட்டுகளுக்கு தகுந்த நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு 40,000 பல்வேறு வகை மூட்டு ஊசிகள், 5000 மூட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றாா். சிஎம்சி வேலூா், லண்டன், இங்கிலாந்து, கோவை கங்கா மருத்துவமனைகளில் பணி புரிந்த மூத்த மருத்துவா் ச.சுகவனம் தலைமையில் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு இந்த சேவையை வழங்கி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com