விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

சேலத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியில் திரளான பெண்கள் பங்கேற்றனா். சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, சேலம், மெய்யனூா் பகுதியில் தனியாா் கருத்தரித்தல் மருத்துவமனை சாா்பில் பெண்களுக்கு ஏற்படும் நீா்க்கட்டி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மருத்துவா் ஜி.ஜெய மாலா, மருத்துவா் எல்.சண்முகவடிவு கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இதில் திரளான பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு நீா்க்கட்டியினால் ஏற்படும் பாதிப்புகள், சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மெய்யனூா் பகுதியில் தொடங்கிய பேரணியானது, ஐந்து சாலைச் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வழியே சென்று மீண்டும் மெய்யனூரில் நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com