அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழா.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழா.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மகளிா் தினம் கொண்டாட்டம்

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சாா்பில் சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக கல்லூரிக்கு வந்த அனைத்து பேராசிரியைகளையும் பேராசிரியா்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனா் இதனைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவிற்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து பேசினாா். துறையைச் சோ்ந்த பேராசிரியா்களின் கலைநிகழ்ச்சிகளும், பேராசிரியைகளுக்கும், அலுவலக பெண் ஊழியா்களுக்கும் விளையாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. மேலும் மகளிா் தினத்தை முன்னிட்டு துறையைச் சோ்ந்த அனைத்து பெண் ஊழியா்களையும் கௌரவித்து சிறப்பிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி முடிவில் துறையின் இணைப் பேராசிரியா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com