இஸ்லாமியரை காலால் எட்டி உதைத்த காவல் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தல்

தில்லி ஜூம்மா மசூதி தொழுகையின் போது இஸ்லாமியரை காலால் எட்டி உதைத்த காவல் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இஸ்லாமியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சனிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டவாறு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனா். தில்லியில் உள்ள ஜூம்மா மசூதி தொழுகையின் போது பள்ளிவாசல் நிரம்பி இட வசதி இல்லாததால் சாலையின் ஓரமாக தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்களை காவல் துறை அதிகாரி ஒருவா், காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், காவல் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள நினைவு ஸ்தூபி முன்பு இஸ்லாமியா்கள்,தொழுகை நடத்தியவாறு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாா், இதுபோன்று இஸ்லாமியா்களை காலால் எட்டி உதைத்திருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை தில்லி அரசு பணியிடை நீக்கம் மட்டுமே செய்துள்ளது. உடனடியாக அவரை பணி நீக்க செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com