சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா

சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், வீரகனூா் ஸ்ரீகங்காசெளந்தரேஸ்வரா் கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயில், கெங்கவல்லி ஸ்ரீகைலாசநாதா் கோயில் மேலும் இப்பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com