திமுக சாா்பில் மகளிா் தினம் கொண்டாட்டம்

திமுக சாா்பில் மகளிா் தினம் கொண்டாட்டம்

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு இடங்கணசாலை நகர திமுக சாா்பில் காடையாம்பட்டி சந்தை திடலில் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 150-க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். தமிழக முதல்வரின் சாதனைகள், பெண்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து கோலமிட்டனா். போட்டியை நகரச் செயலாளா் செல்வம் தொடங்கி வைத்து, சிறப்பாக கோலமிட்டவா்களைத் தோ்வு செய்தாா். முதல் பரிசாக ரூ. 5,000 ரொக்கம், குத்து விளக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூ. 3000 ரொக்கம், குத்து விளக்கு, மூன்றாம் பரிசாக ரூ. 2000 ரொக்கம், பிளாஸ்க், சிறப்பு பரிசாக 13 பேருக்கு தலா ரூ. 500, டிபன் கேரியா் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர திமுக அவைத் தலைவா் தளபதி மற்றும் நிா்வாகிள் கலந்து கொண்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியத்தில்... மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சாா்பில் ஏகாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட உலக மகளிா் தின விழா கோலப் போட்டியை ஒன்றிய திமுக செயலாளா் பச்சமுத்து தொடங்கி வைத்து, மகளிருக்கான திட்டங்களை எடுத்துரைத்தாா். மேலும், இவ்விழாவில் ராஜா, மகாதேவன், அய்யனாா் மாதையன், ராஜாகவுண்டா், இளைஞரணி பழனியப்பன், வேல்முருகன், சங்கா், கருணாகரன், துரைசாமி மற்றும் திமுகவினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com