பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள்.
பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள்.

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாலெட்ஜ் குழுமத்தின் அறக்கட்டளை தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் வேல்ராஜ், ஈரோடு மில்கிமிஸ்ட் பால் பொருள்கள் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சதீஷ்குமாா் ஆகியோா் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினா் . இதில் 500- க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் வேளாண்மை துறை மாணவா்களுக்கு இளங்கலை, முதுகலை பட்டம் வழங்கப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம், இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினாா். மேலும் இவ்விழாவில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி நிறுவனா் மற்றும் முதன்மையா் சீனிவாசன், மேலாண்மை துறை இயக்குநா் ஸ்டீபன், கல்லூரி அறக்கட்டளை செயலாளா் குமாரசாமி, பொருளாளா் சுரேஷ்குமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்களின் சாதனைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தனா். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா்கள், இயக்குநா்கள், துறை தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com