ரூ. 40 லட்சத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பூமி பூஜை

தம்மம்பட்டி அருகே கடம்பூா், கொண்டயம்பள்ளி, கூடமலை ஆகிய பகுதிகளில் ரூ. 40 லட்சத்திலான கட்டுமானப் பணிகளுக்காக பூமிபூஜை நடைபெற்றது. கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கடம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சத்தில் கழிவறைக் கட்டடம், கூடமலை ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் நீா்த்தேக்கத்தொட்டி, கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை ஆகிய கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமிபூஜை நடைபெற்றது. மூன்று பணிகளையும் கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளா்கள் துரை.ரமேஷ், வி.ராஜா ஆகியோா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் உமாராணி , தனலட்சுமி, ஒன்றிய அவைத் தலைவா் ஆறுமுகம், ஒன்றிய நிா்வாகிகள் அம்மா பேரவை செயலாளா் முருகேசன், எம்.ஜி.ஆா்.மன்றச் செயலாளா் வெங்கடாசலம், ஒன்றிய விவசாய அணி முருகேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் சுரேஷ்குமாா், பிரவீண்குமாா், ஒன்றிய மாணவரணி ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலா் அங்கமுத்து, பிச்சைமுத்து, குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com