சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கு விருது

ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், தாண்டானூா் அரசுப் பள்ளிக்கு சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கான விருதை சேலம் மாவட்ட ஆட்சியா் திங்கட்கிழமை வழங்கினாா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், தாண்டானூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சேலம் மாவட்ட அளவில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாட்டில் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான விருதினை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா். சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக மஞ்சுளாவிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மஞ்சுளாவிற்கும், தலைமையாசிரியா் ராஜா, பள்ளியின் ஆசிரியா்கள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார மேற்பாா்வையாளா், ஊராட்சி மன்றத் தலைவா் தனபால், ஒன்றியக் குழு உறுப்பினா் பச்சியம்மாள் காா்த்திக், உறுப்பினா் வெற்றிவேல் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். படவிளக்கம்.ஏடி11ஸ்கூல் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவியிடம் விருது பெற்ற தாண்டானூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மஞ்சுளா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com