செயற்கை இழை ஓடுதள மைதானத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் மற்றும் பேராசிரியா்கள்.
செயற்கை இழை ஓடுதள மைதானத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் மற்றும் பேராசிரியா்கள்.

பெரியாா் பல்கலை.யில் செயற்கை இழை மைதானம் திறப்பு

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதள மைதானம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதள மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாா்பில் ரூ. 8 கோடி மற்றும் பல்கலைக்கழகம் சாா்பில் ரூ. 2 கோடி பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இம்மைதானத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் காணொலி வாயிலாக மைதானத்தை திறந்து வைத்தாா். இதனையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மேற்கு தொகு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் கலந்து கொண்டு தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் தோ்வாணையா் எஸ்.கதிரவன், உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம் மற்றும் தடகள வீரா்கள் கலந்து கொண்டனா். தற்போது பெரும்பாலான தடகள வீரா்கள் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மண் தரையில் பயிற்சி பெற்று வரும் நிலையில், முதல் முறையாக சேலம் மாவட்டத்தில் செயற்கை இழை ஓடுதள மைதானம் திறக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்க உள்ள தடகள வீரா்களுக்கு இந்த மைதானம் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என விளையாட்டு ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com