வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சேலம், கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சேலம், கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரிக்கை

சேலம்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். குறிப்பாக வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்; 2021ஆம் ஆண்டு டிசம்பா் 9ஆம் தேதி தில்லியில் விவசாயிகளுக்கு எழுத்துபூா்வமாக கொடுக்கப்பட்ட, இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.தங்கவேலு, ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் டி.கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com