சேலத்தில் இருந்து மகாபலிபுரத்துக்கு நேரடி பேருந்து சேவை

சேலத்தில் இருந்து மகாபலிபுரத்துக்கு நேரடி பேருந்து சேவை

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மகாபலிபுரத்துக்கு பேருந்து சேவையை அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் புகா் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி இரவு 10.15 மணிக்கு விழுப்புரம், கிளாம்பாக்கம், வண்டலூா் மற்றும் கோவளம் வழியாக மகாபலிபுரத்திற்கு ஒரு புகா் பேருந்து புதிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இப்பேருந்து வசதியினால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மென்பொருள் பணியாளா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறுவாா்கள். மேலும், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவாரத்துக்கு இரண்டு சாதாரண கட்டண நகரப் பேருந்து சேவையையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா். இந்தப் பேருந்து, சேலம் புகா் பேருந்து நிலையத்தில் இருந்து 5 ரோடு, சாரதா கல்லூரி அஸ்தம்பட்டி மற்றும் கோரிமேடு வழியாக ஏற்காடு அடிவாரத்திற்கு இரு சாதாரண கட்டண நகரப் பேருந்துகள் மூலம் தினசரி 52 நடைகள் இயக்கப்பட உள்ளன.

இவ்விழாவில், சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ராஜேந்திரன், சேலம் மண்டல போக்குவரத்து பொது மேலாளா், துணை மேலாளா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com