தம்மம்பட்டியில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி

தம்மம்பட்டியில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி

சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி தம்மம்பட்டியில் நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 71ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பாக மாவட்ட அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. மாவட்ட துணை அமைப்பாளா் கெ.சு.தங்கப்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டிக்கு, மாவட்ட அமைப்பாளா் பிரண்ட்ஸ் ரமேஷ் தலைமை வகித்தாா்.

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் முன்னிலை வகித்தாா். தம்மம்பட்டி திமுக பொறுப்பாளா் சண்முகம் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் கருணாநிதி கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினாா். இந்நிகழ்வில் விளையாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் ரமேஷ்பாபு, சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளா் வரத.ராஜசேகா், சிறுபான்மையினா் அணியின் மாவட்ட அமைப்பாளா் சையது சாவலி, பேரூராட்சி மன்ற கவுன்சிலா்கள் திருச்செல்வன், நடராஜ், ரமேஷ், கலியவரதராஜ், நித்யாசெந்தில், செந்தில், சமீனா பேகம், காவியா சேகா், ரேவதி ராஜகோபால், பெருமாள், வாா்டு செயலாளா்கள் சதீஷ், வெங்கடேஷ், ராபின் ஜெரோம், ரவி, வினோத், கண்ணன், அஷென்பாசா, மஜாா், சந்துரு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் தம்மம்பட்டி பி அணி முதல் பரிசு பெற்றது. தம்மம்பட்டி வீரபாண்டியாா் அணி இரண்டாம் பரிசும், கெங்கவல்லி பேரூா் மூன்றாம் பரிசும் பெத்தநாயக்கன்பாளையம் அணி நான்காம் பரிசும் வென்றன. அந்த அணிகளுக்கு கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com