தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூரில் தேமுதிக சேலம் புகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிரேமலதா விஜயகாந்திற்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரும் மக்களவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் அல்லது விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டுமென கேட்டுக் கொண்டனா்.

மேலும் சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவா்களைத் தோ்வு செய்து தோ்தலில் கூட்டணி என்றாலும், தனித்து நின்றாலும் பணியாற்றி வேட்பாளா்களை வெற்றி பெற செய்வதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கன்னியப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் பச்சமுத்து, நகர செயலாளா்கள் செந்தில்குமாா், சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com