பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாம்

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனமும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் பயிற்சி முகாமை நடத்தின. இந்த முகாமில் மோளையனூா், விளாம்பட்டு, பள்ளிக்காடு, தாளூா், பாலுத்து ஆகிய பழங்குடி கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினருக்கு பண்ணைக் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வானொலிப் பெட்டிகள், சிறுதானிய விதைகள், ஊட்டச்சத்து தோட்ட விதைகள் முதலியவை விநியோகிக்கப்பட்டன.

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயக்குநா் ஜி.ஹேமபிரபா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், திட்ட இயக்குநா் து.புத்திர பிரதாப், பழங்குடி நலவாரிய உறுப்பினா் வெங்கடேசன், ஆலடிப்பட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com