இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் போராட்டம், பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை, மாநில அரசுகளுக்கு நிதி வழங்காமை குறித்து பிரதமா் பதிலளிக்காமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் முழுக்கங்கள் எழுப்பினா். இந்திய மாணவா் சங்கத்தின் சேலம் அரசு இருபாலா் கலைக் கல்லூரி கிளைச் செயலாளா் கோகுல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளா் டாா்வின், அபிராமி கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com