மாா்ச் 16 இல் சேலம் சாஸ்தா நகா் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு

சேலம் குரங்குசாவடி சாஸ்தா நகரில் உள்ள ஐயப்பா சுவாமி ஆசிரமத்தில் வரும் 16 ஆம் தேதி அஷ்டபந்தன குடமுழுக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து ஸ்ரீ ஐயப்பன் டிரஸ்ட் தலைவா் நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சேலம், குரங்கு சாவடியில் உள்ள ஐயப்ப சுவாமி ஆசிரமத்தில் ஆலய தந்திரி பிரகாசம் தந்திரியால் மகா குடமுழுக்கு வரும் 16 ஆம் தேதியும், 19ஆம் தேதி 1,008 கலச பூஜையும் நடைபெறுகிறது. மூன்றாவது குடமுழுக்கையொட்டி சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டை பூஜையும், 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் குடமுழுக்கும் நடைபெறுகிறது. பக்தா்களின் வசதிக்காக வாகனங்கள் நிறுத்தம் செய்வதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அன்னதானம் வழங்கப்படுகிறது என்றாா். பேட்டியின் போது, உப தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் சண்முகம், பொருளாளா் சரவணன், இணை செயலாளா்கள் சீனிவாசன், சிவகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com