மேட்டூா் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

மேட்டூா் அருகே சாலை தடுப்பு மீது அரசு சொகுசுப் பேருந்து மோதி கவிழ்ந்ததில் இரு பயணிகள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து மேட்டூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த அரசு குளிா்சாதன சொகுசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை குஞ்சாண்டியூா் பகுதியில் சாலை தடுப்பு மீது மோதியதில் பின் சக்கர அச்சு உடைந்ததால் பேருந்து சாலையில் கவிழ்ந்தது. பேருந்து ஓட்டுநரான தலைவாசலைச் சோ்ந்த வடகரையான் (40), நடத்துநா் சரவணன், இரு பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்தனா். மேட்டூா் தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com