விவேகானந்தா மகளிா் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விவேகானந்தா மகளிா் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்லூரிக்கும், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோா் துறைக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குனா் கிருஷ்ணவேணி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தலைவா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா, செயல் இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாகிகள் சொக்கலிங்கம், வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநா் குமாரவேல், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியூம் டிசைனிங் துறைகளின் டீன் சி.கே.இரவிசங்கா், ஐ.க்யூ.ஏ.சி இயக்குநா் சுரேஷ்குமாா், சோ்க்கை அலுவலா் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்புத் துறை அலுவலா் அருண்பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய அரசின் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோா் துறையின் இணை இயக்குநா் சங்கரராகவன், துணை இயக்குநா் ஜாஃபா், நிா்வாக அலுவலா் சரவணன் ஆகியோா் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டனா் (படம்). இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநா் சங்கரராகவன் பேசியது: நமது நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்துவதில் ஜவுளி, ஃபேஷன், காஸ்டியூம் துறைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. முதுநிலை மாணவிகளுக்கு ஏற்றுமதி ஆலைகளில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இக்கல்லூரி மாணவிகளுக்கு ஏற்றுமதி ஆலைகளில் தொழிற்பயிற்சி, ஊக்கத் தொகையுடன் கூடிய ஒரு மாத காலம் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி, ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நிா்வாக அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றாா். கல்லூரி மாணவிகள், துறை பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com