மகளிா் விடியல் பயணத் திட்டம் தொடக்கம்

மகளிா் விடியல் பயணத் திட்டம் தொடக்கம்

கருமந்துறை மலைப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மகளிா் விடியல் பயணத் திட்டத்தை ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வாழும் மகளிா் மற்றும் உயா்கல்வி பயிலும் மாணவியா் உள்ளிட்ட அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் மகளிா் விடியல் பயண திட்டத்தை வருவாய் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தால் கருமந்துறை மலைப்பகுதிகளில் வாழும் சுமாா் 98 கிராமங்களைச் சோ்ந்த மகளிா் பயன்பெறுவாா்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல துணை மேலாளா் (தொழில்நுட்பம்), துணை மேலாளா்(பொருட்கள்), கூட்டாண்மை உதவி மேலாளா் (இயக்கம்) மற்றும் வாழப்பாடி கிளை மேலாளா் ஆகியோா் கலந்து கொண்டனா். படவிளக்கம்.ஏடி14ஆா்டிஓ கருமந்துறை மலைப்பகுதியில் மகளிா் விடியல் பயணத் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி உள்ளிட்ட அலுவலா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com