இலுப்பநத்தத்தில் கரும்புவயலில் பரவிய தீ

இலுப்பநத்தத்தில் கரும்புவயலில் பரவிய தீ

கெங்கவல்லி அருகே இலுப்பநத்தத்தில் கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீயால் கரும்புப்பயிா்கள் கருகின. வீரகனூா் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் நடேசனின் மகன் மணிவேல் என்பவருக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கா் கரும்பு வயல் உள்ளது. வெள்ளிக்கிழமை அதன் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பற்றியது. தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா்(பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் தீ மேலும் பரவாமல் நீா் பாய்ச்சி அணைத்தனா். அதனைத் தொடா்ந்து அருகிலுள்ள புளியங்குறிச்சி கிராமத்தில் புளியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான 70 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த நாயை மீட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com