வாழப்பாடியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வாழப்பாடி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மலையப்பன்(59). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவா், தடை செய்யப்பட்ட இணையவழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்த மலையப்பனை வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கையும் களவுமாக கைது செய்தனா். அவரிடம் இருந்த தடை செய்யப்பட்ட இணையவழி லாட்டரிச் சீட்டுகள் மற்றும் விற்பனை செய்வதற்கான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com