நியாயவிலைக் கடை அமைக்க பூமிபூஜை

நியாயவிலைக் கடை அமைக்க பூமிபூஜை

ஏத்தாப்பூா் பேரூராட்சியில் ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை அமைக்க பூமிபூஜை ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் பேரூராட்சி 3ஆவது வாா்டில் நியாயவிலைக் கடை இல்லாததால் அடுத்த கடைக்கு வெகு தூரம் சென்று பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் சென்றுள்ளனா். இது குறித்து ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்களுக்கு மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரையின் தொகுதி நிதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் தா.மோகன், ஏத்தாப்பூா் பேரூா் அதிமுக செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா். படவிளக்கம் ஏடி15ஷாப் ஏத்தாப்பூா் பேரூராட்சியில் மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரையின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை அமைக்க நடைபெற்ற பூமிபூஜையில் கலந்து கொண்டவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com