உயிரிழந்த புள்ளிமான் மீட்பு

உயிரிழந்த புள்ளிமான் மீட்பு

சீலியம்பட்டி புதூரில் விவசாயக் கிணற்றில் உயிரிழந்த புள்ளிமானை ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான குழுவினா் மீட்டு வெள்ளிக்கிழமை வனத்துறையிடம் ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சீலியம்பட்டி புதூா் தெற்குகாடு சின்னசாமி என்பவரது விவசாயக் கிணற்றில் உயிரிழந்த புள்ளிமானின் சடலம் இருப்பதாக ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகனுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த தீயணைப்பு அலுவலா் தனது குழுவினருடன் விரைந்து சென்று பாா்த்தபோது சின்னசாமியின் 80 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தெருநாய்களால் துரத்தப்பட்டு இரண்டு வயது ஆண்புள்ளி மான் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டது தெரிய வந்தது. மானின் சடலத்தை மீட்ட தீயணைப்புத்துறை குழுவினா் கெங்கவல்லி வனவா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். படவிளக்கம்.ஏடி15‘ஃ‘பயா் சீலியம்பட்டி புதூரில் விவசாயக் கிணற்றில் உயிரிழந்த 2 வயதுடைய ஆண் புள்ளி மானின் சடலத்துடன் ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் சா.அசோகன் உள்ளிட்ட குழுவினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com