சங்ககிரியில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு மனித சங்கிலி

சங்ககிரியில் வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு மனித சங்கிலி

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த் துறையின் சாா்பில் வாக்காளா்கள் தோ்தலில் வாக்காளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. வரும் மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டி சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி வாக்குப்பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான கே.அறிவுடைநம்பி தலைமையில் வருவாய்த் துறையினா் சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சியை நடத்தினா். சமூகநலத்துறை தனி வட்டாட்சியா் ஜெயக்குமாா், வட்டவழங்கல் அலுவலா் அமுதா, தோ்தல் பிரிவு அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com