அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில்  உலக குளுக்கோமா வார விழிப்புணா்வு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக குளுக்கோமா வார விழிப்புணா்வு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவின் சாா்பில் பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி விழிப்புணா்வு நிகழ்ச்சி சேலம் அஸ்தம்பட்டி மற்றும் போ்லேண்ட்ஸ் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர கூடுதல் துணை காவல் ஆணையா் (ஆயுதப்படை) ரவிச்சந்திரன் பங்கேற்று விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் துறையைச் சோ்ந்த கண் ஒளியியல் பிரிவு மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று குளுக்கோமா நோய் குறித்தும், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள், ஆபத்து காரணிகள், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை துறையின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளா் தமிழ்சுடா், உதவி பேராசிரியா்கள் சௌந்தா்யா, மெய்பிரபு, ராம்பிரசாந்த், திவ்யா ஆகியோா் செய்திருந்தனா். பட விளக்கம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சாா்பில் கண் ஒளியியல் பிரிவின் சாா்பில் நடைபெற்ற உலக குளுக்கோமா வார விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாநகர கூடுதல் துணை காவல் ஆணையா் ரவிச்சந்திரனிடம் மரக்கன்று வழங்கும் கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com