கூட்ட நெரிசலைத் தவிா்க்க பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலைத் தவிா்க்க பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், எஸ்எம்விடி பெங்களூரு - கொச்சுவேலி இடையே வரும் 23, 30ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், பெங்களூருவில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக அடுத்த நாள் இரவு 7.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமாா்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு வரும் 24, 31 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கொச்சுவேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதே போல், எஸ்எம்விடி பெங்களூரு - கண்ணூா் இடையே 19, 26 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் பெங்களூருவில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு கண்ணூரை அடையும். மறுமாா்க்கத்தில், கண்ணூா் - பெங்களூரு இடையே வரும் 20, 27 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், கண்ணூரில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 1 மணிக்கு பெங்களுரு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com