கெங்கவல்லியில் வாக்காளா் கையெழுத்து இயக்கம்

கெங்கவல்லியில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வூட்டும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கெங்கவல்லி (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளா்கள் அடுத்தமாதம் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வூட்டும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் காவல்துறையினா், பேரூராட்சி அலுவலகத்தினா், அனைத்துப் பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள், தனியாா் பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகளிலும் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியா், அவா்களின் பெற்றோா், உறவினா்கள் ஆகியோா் பங்கேற்றனா். வாக்களிப்பது, வாக்குரிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com