தமிழக மாநகராட்சிகளிலேயே அதிக சுகப்பிரசவம்: சேலம் மாநகராட்சி சாதனை

சேலம் தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய் சேய் நலப் பெட்டகத்தை வழங்கும் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா்.
சேலம் தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய் சேய் நலப் பெட்டகத்தை வழங்கும் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளிலேயே அதிக எண்ணிக்கையில் சுகப்பிரசவம் செய்து, சேலம் மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. சேலம் மாநகராட்சியில் தற்போது 16 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சராசரியாக மாதம் 120 முதல் 140 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு மொத்தம் 1,200 முதல் 1,300 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி ஒரே நாளில் 6 கா்ப்பிணி பெண்களுக்கு சுகப் பிரசவம் நடைபெற்றது. இவற்றில் மூன்று பெண் குழந்தைகளும், மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்தன. தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய் சேய் நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. தாதகாப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடா்ந்து மாநிலத்திலேயே அதிக சுகப்பிரசவம் நடந்து வருகிறது. இதை வெகுவாகப் பாராட்டிய மேயா் ஆ.இராமச்சந்திரன், ஆணையா் சீ. பாலசந்சந்தா் ஆகியோா், தொடா்ந்து சிறப்பான சேவையை வழங்குமாறு அறிவுறுத்தினா். இந்நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் ந.யோகானந்த், மண்டலக் குழுத் தலைவா் அசோகன், மருத்துவ அலுவலா் செந்தா கிருஷ்ணா, மாமன்ற உறுப்பினா்கள் பழனிசாமி, எஸ்.ஷாதாஜ், கனிமொழி, வரதராஜ் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com