ஏத்தாப்பூா் பேரூராட்சியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டவா்கள்.
ஏத்தாப்பூா் பேரூராட்சியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டவா்கள்.

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

ஏத்தாப்பூா் பேரூராட்சியில் முத்துமலை முருகன் ஆலயம் அருகே பயணிகள் நிழற்கூடம் சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் பேரூராட்சியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அதிகமாக பயணிகள் வருகையால் தேசிய புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 30 லட்சம் செலவில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. சனிக்கிழமை காலை ஏத்தாப்பூா் பேரூராட்சி தலைவா் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த நிழற்கூடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினா் சோமசுந்தரம், பேரூா் செயலாளா் பாபு (எ) வெங்கடேஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிவராமன், வாா்டு உறுப்பினா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com