மதுபானம் விற்ற இருவா் கைது

கெங்கவல்லியில் மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பகுதியில் அரசு மதுபானக் கடையில் விற்கப்படும் மதுபானங்களை வாங்கி, அதிக விலைக்கு விற்கப்படுவதாக கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் கூடமலையில் சக்திவேல் (49), கடம்பூரில் ரவி (42) ஆகிய இருவரும் தங்களது வீடுகளில் அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து , அவா்களிடமிருந்த 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com