மேட்டூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

மேட்டூா் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். தூய்மைப் பணியாளா்களுக்கு பணிக் கருவிகள், பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும்; மருத்துவக் காப்பீடு, இஎஸ்ஐ மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்; வருங்கால வைப்பு நிதி, சிறப்பு சேம நலநிதி குளறுபடிகளைக் களைய வேண்டும்; அனைத்துப் பிரிவு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கும் தினக்கூலி ரூ.610 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் காரணமாக நகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்கி உள்ளன. ஒப்பந்தப் பணியாளா்களும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் 18ஆம் தேதி பேச்சு வாா்த்தை மூலம் தீா்வு காண்பதாக போலீஸாா் சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com