பிரதமா் சேலம் வருகை எதிரொலி: இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமா் சேலம் வருகையையொட்டி, மாவட்ட காவல் எல்லையில், திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமா் நரேந்திர மோடி வரும் 19 ஆம் தேதி சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளாா். பிரதமரின் சேலம் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, சேலம் மாவட்ட காவல் எல்லையில், திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் எவ்வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com