ஆத்தூா் வ.உ.சி. நகரில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நவசண்டி மகாயாகப் பெருவிழாவை முன்னிட்டு சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த அம்மன்.
ஆத்தூா் வ.உ.சி. நகரில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நவசண்டி மகாயாகப் பெருவிழாவை முன்னிட்டு சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த அம்மன்.

உலக நன்மைக்காக நவசண்டி மகாயாகம்

சேலம் மாவட்டம், ஆத்தூா் வ.உ.சி.நகா் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக நவசண்டி மகாயாகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, முதலாம் காய யாகசாலை பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகபூஜை தொடக்கம்,தேவி மஹாத்மிய மகா மந்திர ஹோமம், பட்டுப் புடவை சமா்ப்பணம், சௌபாக்கிய திரவிய சமா்ப்பணம், விஸோத்தார ஹோமம், பூா்ணாஹுதி, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் மகா பூா்ணாஹுதி, கலச அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் புதிய பல்லக்கில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், எதிரிகள் விலகவும் வேண்டி மகா யாகம் நடைபெற்றது. மகா சண்டியாகத்தை உ.சுந்தரமூா்த்தி அகோர சிவாச்சாரியாா், உ.காா்த்திகேய சிவம் ஆகியோா் நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை அரவிந்த், ராஜு மற்றும் ஊா்ப் பொதுமக்கள் செய்திருந்தனா். இதையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com